Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரிசி, பருப்பு விலை உயர்வு - மளிகை செலவை குறைக்கும் இல்லத்தரசிகள்!

அரிசி, பருப்பு விலை உயர்வு - மளிகை செலவை குறைக்கும் இல்லத்தரசிகள்!

அத்தியாவசிய மளிகைப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஈரோட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்பங்கள் குறைந்த விலை ரகங்களுக்கு மாறுவதுடன், மளிகைப் பொருள்கள் வாங்கும் அளவையும் குறைத்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிரபலமான பொன்னி அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.65-லிருந்து ஒரு மாதத்தில் ரூ.78 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 20 சதவீத உயர்வாகும். ரகம், தரம் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து சில்லறை விலையில் வேறுபாடு காணப்படுகிறது. 


துவரம் பருப்பு மொத்த விலை செப்டம்பரில் கிலோ ரூ.126-ல் இருந்து அக்டோபரில் ரூ.143 ஆக உயர்ந்துள்ளது. உளுந்து ரூ.120-ல் இருந்து ரூ.128 ஆகவும், பாசிப்பருப்பு ரூ.106-ல் இருந்து ரூ.112 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.90 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஈரோடு வியாபாரி முத்துகிருஷ்ணன் கூறும்போது "மளிகைச் செலவு அதிகரிப்பால் குடும்பங்கள் குறைந்த விலை அரிசி ரகங்களைத் தேர்வு செய்கின்றன. குறைந்த அளவில் பொருள்களை வாங்குவதும் அதிகரித்துள்ளது" என்றார்.


மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2026 ஆகஸ்டில் நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் 5.95 சதவீதமாக இருந்தது. ஜூலையில் இது 5.52 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்த சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்டில் 4.82 சதவீதமாக உயர்ந்தது. உணவு மற்றும் பானங்கள் பிரிவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 5.66 சதவீதமாகவும், உணவகங்கள் மற்றும் தங்குமிட சேவைகள் பிரிவில் 8.38 சதவீதமாகவும் இருந்தது. 

இதனால் வீட்டில் உணவு தயாரிப்பதற்கான செலவுடன், வெளியே உணவருந்துவதற்கான செலவும் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதத்துக்கான அதிகாரப்பூர்வ பணவீக்கத் தரவு அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
"புதிய நெல் மற்றும் இதர வேளாண் விளை பொருள்களின் வரத்து அதிகரிக்கும் வரை விலைகள் தொடர்ந்து உயரும்" என்கிறார் ஈரோடு வியாபாரி குமார்.

முந்தைய செய்தி
வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - நாடுகள் வலியுறுத்தல்
அடுத்த செய்தி
கட்சிகளுக்கு ’அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்த வாக்காளர்கள்

தொடர்புடைய செய்திகள்